குக் வித் கோமாளிக்கு வரும் பிரபல நடிகை.. வெளிவந்த Promo குஷியில் ரசிகர்கள்..!
Author: Vignesh21 February 2023, 11:30 am
விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 105 நாட்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் 4வது சீசனை தொடங்கிவிட்டார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Cook With Comali நிகழ்ச்சியின் புரொமோ எப்போதும் வரவேற்பு அதிகம், இதில் கோமாளிகளாக சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் உள்ளனர், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வருகிற ஜனவரி 28-ந் தேதி முதல் ஒளிபரப்பானது. கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.
அந்த வகையில், குக் வித் கோமாளி சீசன் 4 துவங்கியதில் இருந்து பல நட்சத்திரங்கள் விருந்தினராக நிகழ்ச்சிக்கு வருகை தருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முதலில் ஆர்.ஜே. பாலாஜி பின், கவின் உள்ளிட்டோர் தங்களுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக வந்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார்.
நடிகை ஹன்சிகாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அவருடைய திருமண வீடியோ கூட தற்போது ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பியுள்ளனர். அந்த Promo வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.