நல்லவேளை அவங்க நடிக்கல… பாகுபலி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா..!
Author: Vignesh15 பிப்ரவரி 2024, 11:42 காலை
தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.
அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடியது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து அமோக ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார்.
முன்னதாக, பாகுபலி படத்தின் மூலம் வரவேற்பை பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த ராஜமாதா சிவகாமி தேவி அதுவும் அவர் மகேந்திர பாகுபலி எனக் கூறும் போது மொத்த திரையரங்கமும் அதிர்ந்து போனது என்று சொல்லலாம்.
பாகுபலி வெற்றிக்கு முக்கிய கதாபாத்திரமாக அமைந்த ராஜமாதா சிவகாமி தேவியாக முதன் முதலில் நடிக்க இருந்தது ரம்யா கிருஷ்ணன் கிடையாதாம். இயக்குனர் ராஜமௌலி நடிகை ஸ்ரீதேவியை தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தாராம்.
ஆனால், சில பல காரணங்களால் இப்படத்தில் ஸ்ரீதேவியால் நடிக்க முடியாமல் போக அதன் பின்னர், ரம்யா கிருஷ்ணனை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் செய்துள்ளார். இப்படித்தான் ரம்யா கிருஷ்ணனுக்கு பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
0
0