வீட்டிலேயே சுருண்டு விழுந்த போண்டா மணி.. திடீரென மரணமடைந்த காமெடி நடிகர்..!

Author: Vignesh
24 December 2023, 10:33 am

தமிழ் சினிமாவில் 90களில் ஆரம்பித்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் காமெடி நடிகர் போண்டாமணி. ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் இவரது காமெடி பிரபலம்.

சமீபத்தில் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துவந்தார். இவர் சிகிச்சைக்காக பணமின்றி மிகவும் கஷ்டப்படுவதாக வீடியோ ஒன்று வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதனையடுத்து தமிழக முதல்வர் உட்பட திரைப்பிரபலங்கள் வரை அவரவர் தங்களால் முடிந்த பண உதவி செய்து அவரை காப்பற்றினர். இது குறித்து பிரபல யூடுப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த போண்டாமணி தனக்கு உதவி செய்தவர்களின் லிஸ்ட்டை கூறி நன்றி தெரிவித்தார். போண்டா மணியின் நிலையை அறிந்து மனோபாலா, பார்த்திபன், தனுஷ் என்று பல்வேறு பிரபலங்கள் அவருக்கு உதவி செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக தொடர்ந்து நலமுடன் வீடு திரும்பினார்.

bonda mani

ஆனால், நடிகர் வடிவேலு மட்டும் அவரை கண்டுகொள்ளாமல் தலையைக்கூட காட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி வீட்டிலே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உறுதி செய்து இருக்கிறார்கள். தற்போது, அவரது மறைவிற்கு பல நட்சத்திரங்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இறுதிச்சடங்கிற்காகவது வடிவேலு வந்து பார்ப்பாரா? என்ற கேள்வியும் தற்போது இழுந்துள்ளது.

  • Trisha emotional Instagram post நீ இல்லாமல் நான் எப்படி வாழ…மனம் உடைந்த திரிஷா…வைரலாகும் பதிவு…!
  • Views: - 503

    0

    0