சில்க் மட்டும் கூட இருந்தா அந்த நினைப்பே வராது : பிரபல இயக்குநர் பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan20 February 2025, 4:59 pm
சில்க் ஸ்மிதா எ80 மற்றும் 90களின் கனவுக்கன்னி மட்டுமல்ல இன்று வரை பல நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் எழுத்தாளராக அறிமுகமான ஜிஎம் குமார், பின்னர் அறுவடை நாள் படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
இதையும் படியுங்க: இந்த வார தியேட்டரில் கொத்தா இறங்கும் 10 படங்கள்..!
தொடர்ந்து பல படங்களை இயக்கிய அவர், கொஞ்சம் கொஞ்சமாக நடிகராக மாறினார். அவன் இவன் படத்தில் ஹைனஸ் என்ற கதாபாத்திரத்தில் ஜமீன்தாராக நடித்திருந்தார்.
இவர் நடிகை சில்க் ஸ்மிதா குறித்து வெளிப்படையாக பல விஷயங்களை கூறியுள்ளார். சில்க் ஸ்மிதா என் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு தான் புறப்படுவார்.
சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நடிகைகளே தமிழ் சினிமாவில் இல்லை. சில்க் இருந்த வரைக்கும் செக்ஸி என்பது கவிதையாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது ஐட்டம் பாடல் என்ற போர்வையில் ஆபாசத்தை புகுத்திவிட்டார்கள்.
சில்க் தன்னோட காஸ்ட்யூமை ஆங்கில புத்தகத்தில் இருந்து தேர்வு செய்வார். சில்க் போன்ற ஸ்டைலான ஒரு நடிகையை தற்போது வரை நான் பார்த்ததில்லை.
அன்றைய காலத்தில் எம்ஜிஆர் படங்களில் நிச்சயம் ஐட்டம் சாங் இருக்கும். அதனால் மனைவிமார்கள் தங்கள் கணவர்களை எம்ஜிஆர் படத்திற்கு போகவிடமாட்டார்கள். சிவாஜி படத்திற்கு அனுப்புவார்கள்.
அப்பொழுதெல்லாம் எம்ஜிஆர், சிவாஜியுடன், சரோஜாதேவி, பத்மினி, ஜெயலலிதா, மஞ்சுளா போன்ற நடிகைகள் மாறி மாறி பணியாற்றினர்.
ஆனால் இப்பொழுதோ ஒரு படத்தில் அந்த ஹீரோவோடு ஜோடி சேரும் நடிகைகளை மீண்டும் தங்கள் படத்தில் ஹீரோக்கள் நடிக்க வைப்பதில்லை. இது ஈகோ என ஜிஎம் குமார் கூறியுள்ளார்.