விவேக்குடன் காக்கா காமெடியில் நடித்தவரை நியாபகம் இருக்கா?.. நியூ லுக்கில் மெர்சலாக மிரட்டும் காக்கா கோபால்..!

Author: Vignesh
27 February 2024, 3:05 pm

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம்.

kaka gopal

அந்தவகையில், காமெடி நடிகரின் போட்டோ ஷூட் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்துள்ளார்கள். சிலர் மட்டுமே நிலைத்து உள்ளனர். பலர் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள். இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரியவில்லை. அந்த வகையில், ஜீவாவின் ஆசை ஆசையாய் படத்தில் நடிகர் விவேக் உடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் காக்கா கோபால்.

மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தில் ரூபாய் ஐந்துக்கு பிரியாணி சாப்பிட்ட விவேக்கிற்கு காக்கா குரல் வந்துவிடும். அப்போது, ரோட்டில் சென்று கொண்டிருக்கும் கோபாலிடம் ஏப்பம் விட்டால் காக்கா குரல் வருது என்று விவேக் புலம்புவார். காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராமல் உன்னி கிருஷ்ணன் குரலா வரும் என்று கோபால் பேசிய டயலாக் தற்போது வரை பிரபலமாகியுள்ளது. அதன் பின்னர், சிட்டிசன், தொடரும் என மொத்தம் 150 படங்களில் நடித்த காக்கா கோபால் அதன் பின்னர் என்ன ஆனார் என்பதே தெரியாமல் இருந்தது.

பத்து வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ள காக்கா கோபால் எட்டு படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரம் நடித்து வருகிறார். தற்போது, இவரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

kaka gopal
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 182

    0

    0