ரஜினி படத்தில் நடிக்கவிருந்த சீரியல் நடிகை.. பின்னர் ‘நோ’ சொன்னதற்காக காரணம்?..

Author: Vignesh
28 February 2024, 1:44 pm

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் தொகுப்பாளினிகளும் அதிக அளவு மக்களிடையே பேமஸ் ஆகி வருகின்றனர். அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். அந்த வரிசையில் தற்போது சைத்ரா ரெட்டியும் இணைந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து இருந்தார் சைத்ரா ரெட்டி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். ரக்கட் என்ற படத்திலும் நடித்துள்ளார். முக்கிய ரோலில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த சைத்ரா, அஜித்தின் வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சமீபத்தில் தான் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Chaitra-Reddy-updatenews360

இவருக்கு ஏற்கனவே ரசிகர் வட்டம் உருவாக்கியிருந்த நிலையில், சமீபமாக இன்ஸ்டாகிராமால் இளசுகளும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் போடும் போஸ்ட்டுகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்.

rajini - updatenews360

இந்நிலையில், ஜெய்லர் படத்தில் மிர்னா நடித்திருந்த ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில், முதன் முதலில் நடிக்க இருந்தது பிரபல சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி. ஆனால், அதன் பின்னர் அவரால் நடிக்க முடியாமல் போனதன் காரணமாக நடிகை மிர்னாவை இயக்குனர் நெல்சன் தேர்ந்தெடுத்துள்ளார். முன்னதாக அஜித் நடிப்பில், வெளிவந்த வலிமை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 218

    0

    0