சன் டிவியின் பிரபல சீரியலுக்கு END CARD.. பெருமூச்சு விடும் இல்லத்தரசிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan17 December 2024, 1:59 pm
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. இதனால் அந்த சேனலுக்கு எதிராக பல சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பி இல்லத்தரசிகளை கட்டிப் போட்டு வருகிறது.
இதையும் படியுங்க: சீரியலில் மட்டும் ராஜா, ராணி இல்ல… ஆல்யா – சஞ்ஜீவ் ஜோடியின் அடுத்த பிரம்மாண்டம்!
ஆனால் சமீபகாலமாக சேனல்களில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் எப்போது முடியும் என்றளவுக்கு உள்ளது. குறிப்பாக மதியம் ஒளிபரப்பாகும் சில சீரியல்களும், லேட் நைட்டில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களும் அடங்கும்.
Mr.மனைவி சீரியலுக்கு போட்டாச்சு END CARD
அப்படி சன் டிவியில் 10 மணிக்கு ஒளிபரப்பான சீரியலுக்கு என்ட் கார்டு போட உள்ளனர். ஏற்கனவே சுந்தரி, இனியா போன்ற சீரியல்கள் மக்களிடம் வரவேற்பை பெற்று விடைபெற்றது.

ஆனால் இந்த சீரியல் எப்போதும் முடிவடையும் என காத்திருந்த ரசிகர்களுக்கு விடை கிடைத்துள்ளது. மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த மிஸ்டர் மனைவி தொடர் முடிவுக்கு வருகிறது
டிசம்பர் 22ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கிளைமாக்ஸ் காட்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல் முடியப்போகிறதா என வருத்தப்படும் ரசிகர்களை விட, ஒரு வழியா முடிந்தது என பெருமூச்சு விடுபவர்களே அதிகம்.