யூடியூபர் இர்பான் கார் விபத்து… சம்பவ இடத்திலேயே பலி- அதிர்ச்சி தகவல்!

Author: Shree
26 May 2023, 7:47 pm

யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார்.

சில மாதங்களுக்கு முன்னர் இர்பானுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்று இவருடைய நண்பர்கள் நிச்சயதார்த்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள். இதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள்.

அதையடுத்து இவர்களுக்கு அண்மையில் பிரம்மாண்டமாக இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்பானின் பென்ஸ் கார் மோதி பதமாவதி என்ற பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது காரை ஓட்டி வந்தது இர்பானின் ட்ரைவர் அசாருதீன் என்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து அசாருதீன் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீசார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து உண்மையில் காரை ஒட்டி வந்தது அசாருதீன் தானா? என சிசிடிவி காட்சி கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, விபத்து நடந்த இடத்தில் இர்ஃபானை பார்த்ததாக போலீசாரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரு வேலை கார் ஓட்டிவந்து விபத்துக்குள்ளாக்கிவிட்டு இர்பான் எஸ்கேப் ஆகிவிட்டாரா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளது. இர்பானுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த கார் விபத்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • surya 45 movie villan role act in rj balaji ரசிகர்களுக்கு பயங்கர ட்விஸ்ட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி…சூர்யா45-ல் வில்லனாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்..!
  • Views: - 691

    1

    0