தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார். இந்த நிலையில், சகுந்தலம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இதில் பறவைகள் மற்றும் மான்கள் சூழ காட்டில் அமர்ந்துள்ளார் சமந்தா. சகுந்தலாவின் தோற்றத்தில் இவர் மிகவும் அழகாக காணப்படுகிறார். எதையோ விருப்பத்துடன் பார்க்கிறார். இந்தப் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது அந்த வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சமந்தா அப்போது ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்தார் சமந்தா. பொதுவாக நடிகைகள் இவ்வாறு கலந்துரையாடும் போது சிலர் ஏடாகூடமான கேள்விகளை கேட்பதும் உண்டு.
அவ்வாறு சமந்தாவிடமும் நெட்டிசன் ஒருவர், நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா?… உங்களுடன் இனப்பெருக்கம் செய்து கொள்ள எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு “முதலில் ஒரு வாக்கியத்தில் ‘இனப்பெருக்கம்’ எனும் வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள்” என நெத்தியடி பதில் கொடுத்தார் சமந்தா.