குடும்பமே எனக்கு குழி தோண்டுச்சு – வனிதாவிடம் சொல்லி வருந்திய பவர் ஸ்டார்!

Author: Shree
10 March 2023, 9:57 pm

காமெடி நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் சந்தானம் நடிப்பில் 2013ம் ஆண்டில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் கலகலப்பான காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டார்.

இந்நிலையில் வனிதா எடுத்த சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பவர் ஸ்டார், அக்கு பஞ்சர் மருத்துவராக இருந்த நான் ஒரு படத்தை தயாரிக்க ஒருவருக்கு பணம் உதவி செய்தேன். பின்னர் நானே ஏன் படத்தில் நடிக்க கூடாது என்று நடித்த படம் தான் லத்திகா.

பணம் இருந்த போது என்னுடன் குடும்பம் உட்பட பல பேர் இருந்தனர். ஆனால், பணம் இல்லாத போது யாருமே என்னுடன் இல்லை. ஒரு முறை சொந்த குடும்பமே என்னை கடத்தி பணம் பறித்தார்கள். அது எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது என கூறி வருத்தப்பட்டார்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!