கல்யாணத்துக்கு OK சொன்ன நடிகர் பிரபாஸ் ….ரகசியத்தை போட்டுடைத்த ராம் சரண்…பொண்ணு எந்த ஊரு தெரியுமா..!

Author: Selvan
13 January 2025, 10:00 pm

கடைசியில் பிரபாஸுக்கு கல்யாணம் உறுதி

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ்.இவருக்கு 45 வயது கடந்தாலும் இன்னும் திருமணத்தை பற்றி எந்த ஒரு முடிவு பண்ணாமல் இருந்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் பிரபாஷின் திருமணம் குறித்த கேள்விகளை சமூக வலைதளத்தில் கேட்டு வந்தனர்.இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய அம்மா ஒரு பேட்டியில் பிரபாஷின் திருமணம் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை கூறினார்.

Ram Charan on Prabhas marriage

அதாவது பிரபாஷின் நெருங்கிய நண்பர் ஒருவர் திருமணத்திற்கு பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு,அவரது மனைவியுடன் சேர்ந்து வாழாமல்,கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.இதனால் பிரபாஸ் கல்யாணம் பண்ணிக்க யோசிக்கிறார் என்ற தகவலை கூறியிருந்தார்.

இதையும் படியுங்க: படம் தோல்விக்கு நான் தான் காரணமா…ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்த ஜெயம் ரவி..!

இந்த நிலையில் தற்போது நடிகர் ராம் சரண் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தி வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.அப்போது பிரபாஷின் திருமணம் குறித்து ராம் சரனிடம் கேட்ட போது,அதற்கு அவர் பிரபாஷின் வருங்கால மனைவி ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி நகருக்கு அருகில் இருக்க கூடிய,கான பவரம் ஊரை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறினார்.இதனால் நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • lokesh kanagaraj decided to take break from social media லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?