ஓம் என் Room-க்கு வா..! ஆதிபுருஷ் இயக்குனர் ஓம் ரவுத் மீது கோபத்தில் பிரபாஸ்? – சர்ச்சை வீடியோவின் உண்மை என்ன?

Author: Vignesh
6 October 2022, 11:45 am

இந்தியில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ என்கிற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில், ராமாயணக் கதையைத் தழுவி உருவாகிவரும் படம் ‘ஆதி புருஷ்’. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும் நடித்திருக்கிறார்கள். டி – சீரிஸ்,ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஐமேக்ஸ், 3டி முறையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையடுத்து படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. வெளியானது முதல் வலைதளங்களில் ட்ரோல்களை எதிர்கொண்டு வருகிறது இந்த டீசர். ஆதிபுருஷ் டீசர் வீடியோகேமில் வரும் கேரக்டர்களைப்போல காட்சிபடுத்தப்பட்டுள்ளதும், மோசமான அனிமேஷன் காட்சிகளும் தான் ட்ரோல்களுக்கு காரணம். பல ரசிகர்கள் படத்தின் காட்சிகளை மீம்களாக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.

இதனிடையே, நடிகர் பிரபாஸ் கோபமாக ஆதிபுருஷ் இயக்குநர் ஓம் ரவுத்தை தனது அறைக்கு அழைப்பது போன்ற வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானது. வீடியோவின் தொனியை ரசிகர்கள் தவறாகக் கருதி டீசருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே பிரபாஸ் கோபமாக இயக்குநரை கண்டிக்க தனது ரூமுக்கு வா என்று அழைக்கிறார் என்று கமெண்ட்கள்காண முடிந்தது.

ஆனால், உண்மையில் அப்படி எதுவும் இல்லை என நடிகர் பிரபாஸுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. “சலசலப்புக்கு மத்தியில் படத்தின் விளம்பரங்களைப் பற்றி விவாதிக்க மட்டுமே பிரபாஸ் ஓம் ராவத்தை அறைக்கு அழைத்தார். அதற்கு மேல் எதுவும் இல்லை. தனது ரசிகர்களுக்காக எப்படி ஸ்பெஷலாக ஏதாவது செய்வது என்று பிரபாஸ் ஆலோசனை நடத்தினார். தவிர, ஓம் ராவத்துக்கும் பிரபாஸுக்கும் இடையேயான உரசல் என்று வெளியாகியுள்ள தகவல்கள் திட்டவட்டமாக தவறானவை மற்றும் ஆதாரமற்றவை” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 558

    0

    0