நடிகர் பிரபாஸ் திருமணம் செய்யாமல் இருப்பது எதனால் தெரியுமா…அவர் அம்மா சொன்ன தகவலால் ரசிகர்கள் ஷாக்..!
Author: Selvan4 January 2025, 5:06 pm
இதெல்லாம் ஒரு காரணமா ரசிகர்கள் கேள்வி..!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரபாஸ்.இவர் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தில் நடித்த பிறகு இந்திய அளவில் பல ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது இருக்க கூடிய சினிமா வாழ்க்கையில் பலர் திருமணம் செய்யாமல் சிங்கிள் ஆக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்,அந்த வகையில் நடிகர் பிரபாஸுக்கு 45 வயது ஆகியும் கல்யாணம் ஆகாமல் இருக்கிறார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் இவர் ஏன் திருமணத்தை தவிர்த்து வருகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் பிரபாஷின் தாயாரான சிவக்குமாரி பிரபாஷின் திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.அதில் பிரபாஷிற்கு ரவி என்ற ஒரு நெருங்கிய நண்பர் இருக்கிறார்.அவர் திருமணம் செய்த பின்பு பல போராட்டங்களை சந்தித்தார்,மேலும் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு பின்பு விவாகரத்து வாங்கி பிரிந்து வாழ்கின்றனர்.
இதையும் படியுங்க: மஞ்சள் கயிறுக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா…நச்சுனு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ்..!
இந்த நிகழ்வு பிரபாஷை ரொம்பவும் மனதளவில் பாதித்தது.இதனால் அவர் திருமணம் பற்றி சிந்தனையே இல்லாமல் இருந்து வருகிறார் என்று பிரபாஷின் அம்மா அந்த பேட்டியில் கூறியிருப்பார்.இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.