அந்த பிரம்மாண்ட படத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ் – இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா?

Author: Shree
19 June 2023, 8:03 pm

தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் அடையாளமின்றி இருந்த பிரபாஸுக்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் அவர் உலகம் முழுக்க பேமஸ் ஆனார். அந்த படத்தில் இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்தார்.

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பல கோடி போட்டு அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் படையெடுத்து வந்தார்கள். அதன் பின்னர் சாஹோ, போன்ற படங்கள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டும் தோல்வியடைந்தது. அதையடுத்து ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.

கடந்த 16ம் தேதி வெளியான இந்த படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ள ஆதிபுருஷ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ராமராக நடிக்க முதலில் பிரபாஸ் தயங்கினாராம். இருந்தாலும் இயக்குனர் ஓம் ராவத் ஸ்பெஷல் விமானத்தில் மும்பையில் இருந்து ஹைதராபாத் வந்து பிரபாஸை நேரில் சந்தித்து கதையை சொல்லி பின்னர் சம்மதம் பெற்றாராம்.

  • Sundar C birthday celebration 2025மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!