3 வது முறையாக 1000 கோடி;கல்கி படைத்த சாதனை;வியப்பில் திரையுலகம்,…

Author: Sudha
13 July 2024, 4:41 pm

இப்போது இந்திய திரைப்படங்கள் பான் இந்தியா மூவிஸ் ஆக மாறிவிட்டன.உலக அளவில் திரையிடப்பட்டு அனைத்து ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்படுகிறது.

சில இந்திய திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையை படைத்துள்ளன. அமீர்கானின் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை கடந்தது. அதன்பிறகு பதான்,ஜவான் ஆகிய திரைப்படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது

கன்னடத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படமும் ஆயிரம் கோடி வசூலை எட்டியதாக கன்னட திரை உலகினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தெலுங்கில் மூன்றாவது முறையாக ஆயிரம் கோடி வசூல் செய்யும் திரைப்படமாக கல்கி திரைப்படம் மாறி உள்ளது.

ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை செய்திருந்தது. மீண்டும் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை செய்திருக்கிறது.

ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படமும் ஆயிரம் கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 171

    0

    0