“GOAT” படத்தில் சிற்றப்பான சம்பவம் செய்யப்போகும் பிரசாந்த், பிரபுதேவா – என்ன ரோல் தெரியுமா?

Author: Rajesh
18 January 2024, 10:13 am

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் .இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். ஆம், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

thalapathy 68-updatenews360

இந்நிலையில் இப்படத்தின் சூப்பரான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, GOAT படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் ரோல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கும் தந்தை விஜய்க்கு நண்பர்களாக இவர்கள் இரண்டு பேரும் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் அவர்களின் ரோல் மிக அழுத்தமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?