தமிழ் சினிமாவில் சிக்கு புக்கு சிக்குபுக்கு ரயிலு என்ற பாடலின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் பிரபுதேவா. இவர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களை கொண்டவர்.
பிரபுதேவா தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் வரை சென்றவர். முதலில் 1955 ஆம் ஆண்டு ரம்லத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் பிறந்த நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக ரமலத்தை விவாகரத்து செய்தார்.
இதனை தொடர்ந்து நயன்தாராவை காதலித்து வந்த பிரபுதேவா அந்த காதலும் கை கூட நிலையில், டாக்டர் ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தனது 2 வது மனைவியை அவ்வளவாக மீடியா பக்கம் காட்டாத பிரபுதேவா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் வீடியோ காலில் பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது வந்துள்ள சூப்பரான செய்தி என்னவென்றால் பிரபுதேவாவிற்கு இரண்டாவது மனைவியுடன் பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.
பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் மாஸ்டருக்கு ராஜு சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் என மூன்று பெரும் மகன்கள். அதேபோல் பிரபுதேவாவுக்கும் ரமலத்துடன் வாழ்ந்த போது பிறந்த மூன்று பேரும் மகன்கள் தான்.
பிரபுதேவாவின் சகோதரர்களான ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத்துக்கும் ஆண் வாரிசுகள்தான். எனவே சுந்தரம் மாஸ்டர் வம்சத்தில் முதன் முதலாகப் பிறந்த பெண் குழந்தை பிரபுதேவாவுக்கும் ஹிமானிக்கும் பிறந்திருக்கும் இந்தக் குழந்தைதான். எனவே மொத்த சுந்தரம் மாஸ்டர் குடும்பமும் மகிழ்ச்சியில் குழந்தையைக் கொஞ்சி மகிழ்கிறது.
இந்நிலையில் பிரபுதேவாவின் மகளுக்கு நயன்தாரா என்று பெயர் வைக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரல் ஆகி வருகிறது. இந்த விஷயம் முற்றிலும் பொய் என்று பிரபுதேவாவின் நட்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
This website uses cookies.