முதல் மனைவியுடன் சேர்ந்துட்டாரா பிரபு தேவா? மகனுடன் IPL பார்த்த புகைப்படம் வைரல்!

Author: Shree
17 April 2023, 1:32 pm

இந்திய சினிமாவில் முன்னணி நடன இயக்குனரான பிரபு தேவா நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் என ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர். நடன சூறாவளியான இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பாராட்டப்படுபவர். வெற்றிவிழா திரைப்படத்தில் தான் முதன் முதலாக நடனமாடினார். அதையடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடனமாடியுள்ளார்.

இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். காதலன், லவ் பேர்ட்ஸ், மின்சார கனவு, நாம் இருவர் நமக்கு இருவர், வானத்தைப் போல உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் 1995ம் ஆண்டு ரம்லத் எனபவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் குண்டாக இருப்பதாக அவரை விவாகரத்து செய்துவிட்டார். அவருக்கு மொத்தம் மூன்று மகன்கள். அதில் மூத்த மகன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதையடுத்து நடிகை நயன்தாரவை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார். பின்னர் ரமலத் கொடுத்த டார்ச்சரால் நயன்தாரவை விட்டு பிரிந்துவிட்டார். அதன் பின்னர் யாருக்கும் தெரியாமல் டாக்டர். ஹிமானி சிங் என்ற பெண்ணை 2020ம் ஆண்டில் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார் .

இந்நிலையில் தற்போது அவர் தனது மகனுடன் IPL மேட்ச் பார்த்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகிறது. அதில் அவரது மகன் இவ்வளவு வளர்ந்துவிட்டாரா? என எல்லோரும் செம ஷாக் ஆகிவிட்டனர். இதனை பார்த்து ஒரு வேலை பிரபு தேவா மீண்டும் தன் முதல் மனைவியுடன் நல்ல உறவில் இருக்கிறாரோ என சந்தேகித்துள்ளனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!