வனிதா மகனுடன் ரொமான்ஸ் பண்ண துடிக்கும் பிரபல இயக்குனரின் மகள் – Shooting எப்போ தெரியுமா?..
Author: Vignesh11 June 2024, 9:16 pm
ஆரம்பத்தில் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பிரபு சாலமன் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் பிரபு சாலமன் இருந்து வருகிறார்.
மேலும் படிக்க: அரிய வகை நோய்.. வீட்ல பகத் பாசில் பண்றதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு.. நஸ்ரியா ஷாக்கிங் தகவல்..!
பின்னர் கண்ணோடு காண்பதெல்லாம் படத்தை தொடர்ந்து கிங், லீ, லாடம் போன்ற பல படங்களை இயக்கிய வந்தாலும் இவரை ரசிகர் மத்தியில் பெரிதும் பிரபலமாக்கியது மைனா திரைப்படம் தான்.
மைனா என்ற திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. மைனா திரைப்படம் வெளியாகி பல விருதுகளையும், பாராட்டுகளையும் குவித்தது. இதன் பிறகு பிரபு சாலமன் கும்கி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படமும் மாபெரும் அங்கீகாரத்தை பிரபு சாலமனுக்கு பெற்று கொடுத்தது. இதையடுத்து செம்பி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்ததார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனரான பிரபு சாலமன் மகள் ஹேசல் ஷைனி இன்ஸ்டா பிரபலமானவர்தான். தற்போது, மகள் ஹேசல் ஷைனி ஹீரோயின் ஆக்கி ஒரு படத்தை இயக்கி இருக்கிறாராம் பிரபு சாலமன். இந்த படத்தின், ஹீரோவாக நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரிதான் நடிக்க இருக்கிறாரராம். இந்தபடத்திற்கு, முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது என்றும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.