இந்திய சினிமாவில் முன்னணி நடன இயக்குனரான பிரபு தேவா நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் என ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர். நடன சூறாவளியான இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பாராட்டப்படுபவர். வெற்றிவிழா திரைப்படத்தில் தான் முதன் முதலாக நடனமாடினார். அதையடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடனமாடியுள்ளார்.
இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். காதலன், லவ் பேர்ட்ஸ், மின்சார கனவு, நாம் இருவர் நமக்கு இருவர், வானத்தைப் போல உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் 1995ம் ஆண்டு ரம்லத் எனபவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் குண்டாக இருப்பதாக அவரை விவாகரத்து செய்துவிட்டார். அவருக்கு மொத்தம் மூன்று மகன்கள். அதில் மூத்த மகன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.
மேலும் படிக்க: ரஜினி – கமலுக்கு NO.. அட்ஜஸ்ட்மெண்டிலும் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை..!
இதையடுத்து நடிகை நயன்தாரவை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார். பின்னர் ரமலத் கொடுத்த டார்ச்சரால் நயன்தாரவை விட்டு பிரிந்துவிட்டார். அதன் பின்னர் யாருக்கும் தெரியாமல் டாக்டர். ஹிமானி சிங் என்ற பெண்ணை 2020ம் ஆண்டில் ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்.
மேலும் படிக்க: ரஜினி – கமலுக்கு NO.. அட்ஜஸ்ட்மெண்டிலும் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை..!
இந்நிலையில், பிரபுதேவா தெலுங்கு இயக்குனர் சரண் உப்பலபாடி இயக்கத்தில், ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். 27 வருடங்கள் கழித்து நடிகர் பிரபுதேவாவுக்கு கஜோல் ஜோடியாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் நஸீருத்தீன் ஷா, சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். அட்லியுடன் பல படங்களில் பணியாற்றிய ஜிகே விஷ்ணு இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், புஷ்பா 2 படத்தின் எடிட்டர் நவீன் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.