விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது, கமல் பிறந்த நாள் என்பதை கூட நெட்டிஷன்கள் நினைக்காமல் கமலஹாசனை கழுவி ஊற்றிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன்கள் தான் அப்படி என்றால் பொதுமக்களும் கமல்ஹாசனை கடுமையாக திட்டி வருகிறார்கள்.
உலக நாயகன் கமலஹாசன் பிறந்தநாளுக்கு பிரதீப் ஆண்டனியும் ஒரு வீடியோவை போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது வசூல்ராஜா படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி போட்டு கமலுக்கு வாழ்த்து செய்தார். மேலும், தீர விசாரிப்பதே மெய் என்று ஹேஷ்டேக் போட்டு உள்ளார் பிரதீப். தற்போது இந்த ஹேஷ்டேக் தான் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பிரதீப் ரசிகர்கள் அவர் தக் லைப் செய்துவிட்டதாக கூறி வருகின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை குறித்து அவர் வெளியேற்றப்பட்ட நிலையில், ரசிகர்கள் அவருக்கு தங்களது ஆதரவை வழங்கிக்கொண்டே தான் இருந்துள்ளார்கள். இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறிய பிரதீப் தனது இன்ஸ்டாவில் தற்போது Endemol ShineIND என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் அனுப்ப நினைத்தால் எனக்கு 2 Red Card வேண்டும். எனக்கு எதிராக சதி செய்த 2 பேரை வெளியேற்ற வேண்டும், அதோடு நான் 7வது வாரத்தின் கேப்டன் ஆக வேண்டும் என பதிவு செய்துள்ளார். அவரின் இந்த பதிவு ரசிகர்களிடம் வைரலாகிறது, செம நெத்தியடி என்றும் ரசிகர்கள் கமெண்ட செய்கிறார்கள்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.