கூலிக்கு மார் அடிக்குற கும்பல்.. வாயை கிளறாதீங்க.. பூர்ணிமாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பிரதீப்..!

Author: Vignesh
6 January 2024, 9:59 am

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில், ஆரம்பம் முதலே மக்களிடத்தில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற பிரதீப் எதிர்பாராத விதமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர் கமல் ஹாசன் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.

bigg boss 7 tamil-updatenews360

பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிக்காட்டிய நிலையில், பிரதீப்போ ஜாலியாக அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார். அதாவது, நிறைய தயாரிப்பாளர்கள் அவரை அனுகி உள்ளார்களாம். விரைவில், படம் பண்ண போறேன் என டுவிட் செய்திருக்கிறார்.

poornima ravi - updatenews360

இந்நிலையில், பூர்ணிமா 16 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறி இருக்கிறார். அதனால், அது நல்ல முடிவு என எல்லோரும் பூர்ணிமாவை பாராட்டி வருகின்றனர். மேலும், பூர்ணிமாவின் ரசிகர்கள் சிலர் பிரதிப்பை வம்பு இழுக்க தற்போது, பிரதிப் ஒரு விஷயத்தை கோபமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். பூர்ணிமா அம்மாகிட்ட வாக்கு கொடுத்த ஒரே காரணத்திற்காக அமைதியா இருக்கேன். கூலிக்கு மாரடிக்கிற கும்பெல்லாம் இஷ்டத்திற்கு பேசாதீங்க,.. எனக்கு அடுத்தவர் கேரக்டரை பற்றி மோசமாக பேசி கேம் விளையாடுவது பிடிக்காது என பிரதிப் காட்டமாக தெரிவித்து இருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பூர்ணிமா பிரதீப் கேரக்டரை மோசமாக பேசி கேம் விளையாடியதை குறிப்பிட்டு தான் அவர் இவ்வாறு தெரிவித்ததாக கூறி வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 297

    0

    0