காதலியுடன் கோவாவில் ஹாயாக சுற்றும் பிக்பாஸ் பிரதீப்… வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
24 November 2023, 8:56 am

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே மக்களிடத்தில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற பிரதீப் எதிர்பாராத விதமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர் கமல் ஹாசன் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.

bigg boss 7 tamil-updatenews360

பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிக்காட்டிய நிலையில், பிரதீப்போ ஜாலியாக அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார். அதாவது, நிறைய தயாரிப்பாளர்கள் அவரை அனுகி உள்ளார்களாம். விரைவில், படம் பண்ண போறேன் என டுவிட் செய்திருக்கிறார். மேலும், கோவாவில் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ள பிரதீப் தனது காதலியுடன் அங்கு ஜாலியாக சுற்றி வருகிறார். அந்த புகைப்படம் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

pradeep
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?