யுவனை கேவலமாக திட்டிய பிரதீப் ரங்கநாதன் : ஒரு படத்துக்கே இப்படி ஆணவமா? ரசிகர்கள் கொந்தளிப்பு..!
Author: Vignesh16 November 2022, 3:44 pm
தமிழ் சினிமாவில் குறும்படம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து நல்ல வரவேற்பு பெற்றவர்
20 வயதான போது கோமாளி படத்தினை இயக்கியிருந்த பிரதீப், லவ் டுடே என்ற படத்தினை எடுத்து மாபெரும் வெற்றியை பெற்று வருகிறார்.
இளைஞர்கள் மத்தியில் தன் நடிப்பாலும் இயக்கத்தாலும் 50 கோடி வசூல் கிளப்பில் சேர்ந்து சாதனை படைத்து வருகிறார். யுவன் சங்கராஜா இசையில் வெளியான இப்படத்தின் தியேட்டர் எண்ணிக்கைகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு தன் சிறு வயதில் பிரதீப் ரங்கநாதன் சமுகவலைத்தளத்தில் யுவன் சங்கர் ராஜாவை வொர்ஸ்ட், ஃபிராடு என்று கூறியதும் மங்காத்தா பின்னணி இசை காப்பி என்றும் அசிங்கப்படுத்தி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
தற்போது அவரை வைத்தே லவ் டுடே படத்தின் இசையை முடித்துவிட்டார் பிரதீப். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும் தகாத வார்த்தையில் கடுமையாக திட்டியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.