தெம்மாங்கில் தட்டிவிட்ட சிம்பு… சமயம் பார்த்து தூக்கிய பிரதீப் – ஹீரோயினுக்கு செம லக்!
Author: Shree22 March 2023, 6:26 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிக்கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவர் சிறுவயதில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என தமிழ் சினிமாவை கலக்கிக்கொண்டிருந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள சிம்பு 2002இல் முதல் முறையாக டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.
அதன் பின்னர் அடுத்தடுத்த ஹிட் கொடுத்து மன்மத நடிகனாக பெண் ரசிகைகளை கவர்ந்தார். காதல் அழிவதில்லை, அலை, கோவில், மன்மதன், வல்லவன் , விண்ணைத்தாண்டி வருவாயா , அச்சம் என்பது மடமையடா , வெந்து தணிந்தது காடு என பல படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்கி ஹீரோயின்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். இவர் அண்மையில் கொரோனா குமார் என்ற படத்தில் கமிட்டாகி பின்னர் அடுத்தடுத்த நல்ல படங்கள் கிடைத்ததால் அதில் இருந்து விலகிக்கொண்டார்.
தற்போது கொரோனா குமார் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறாராம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறாராம். பிரதீப் ரங்கநாதன் நிச்சயம் இப்படத்தை வேற லெவலில் வச்சி செய்யபோகுறார். இதனால் அதிதி ஷங்கரின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என்பதை அடித்து சொல்லலாம்.