அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? ஆத்தாடி கிடுகிடுனு உயர்த்திட்டாரே..!

Author: Vignesh
8 April 2024, 7:03 pm

தமிழ் சினிமாவில் குறும்படம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து நல்ல வரவேற்பு பெற்றவர் இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். தனது 20 வயதிலே கோமாளி படத்தினை இயக்கியிருந்த பிரதீப், லவ் டுடே என்ற படத்தினை எடுத்து மாபெரும் வெற்றியை பெற்று ஹிட் இயக்குனராக முத்திரைகுத்தப்பட்டார்.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

இவரது படங்களில் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இளைஞர்கள் பெரும்பாலும் விரும்பி பார்ப்பது போன்று முழு முழுக்க காமெடி ஜானரில் படமெடுத்து வித்யாசம் காட்டுவதே பிரதீப்பின் ஸ்டைல். இது தான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. லவ் டுடே எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்கள் கடந்து திரையரங்கில் ஓடி வசூல் சாதனை படைத்தது.

மேலும் படிக்க: கழுத்து நிறைய தங்க நகை.. வாய்ப்பிளக்க வைக்கும் புது லுக்கில் அசால்ட் செய்த மாளவிகா மோகனன்..!

அந்த படத்திற்கு பின்னர் நிறைய டாப் ஹீரோக்களின் படங்களை இயக்க பிரதீப் ரங்கநாதனுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அப்படித்தான் விஜய்யை வைத்து படம் இயக்க பிரதீப் ரங்கநாதனுக்கு வாய்ப்பு வீடு தேடி வந்ததாம். ஆனால், அவர் விஜய்யை வச்சியெல்லாம் படமெடுக்க எனக்கு விருப்பம் இல்லை. அவருக்கு போட்டியாக பெரிய ஹீரோவாகுவதே என் கனவு. அதனால், நானா இப்போதைக்கு ஹீரோவாக நடித்து நம்பர் ஒன் ஹீரோவாகவேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறேன் என கூறி இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறி இருந்தாராம். அடுத்து, பிரதீப் ரங்கநாதன் தெலுங்கு சினிமாவில் பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர இருக்கிறார். அவர் இயக்க இருக்கும் படத்திக்காக 10 கோடி ருபாய் சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 224

    0

    0