விஜய் இல்ல அஜித்.. தட்டித்தூக்கிய பிரதீப்.. மனோஜ் மறைவால் தள்ளிவைத்த அப்டேட்!

Author: Hariharasudhan
26 March 2025, 7:48 pm

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சென்னை: இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பட பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இப்படத்தை, அஜித்குமாரின் குட் பேட் அக்லி, அல்லு அர்ஜுனின் புஷ்பா படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். சாய் அபிநயங்கார் இசையமைக்கும் இப்படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். மேலும், நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், இதன் படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளது.

இதன்படி, இது குறித்த ஒரு போஸ்டர் அறிவிப்பை பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிடவில்லை. காரணம், இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மறைவை ஒட்டி, இந்த போஸ்டர் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக மைதிரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pradeep Ranganathan new film with Mamitha baiju

காதல் படமாக உருவாகும் இப்படம், தீபாவளி ரேஸில் குதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தான் இயக்கி நடித்த லவ் டுடே, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படங்களின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க நடிகராக வளர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: பயிற்சி மருத்துவரை துண்டியால் மூடி.. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

அதேநேரம், இந்த இரண்டு படங்களும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்ததால் வணிக ரீதியாகவும் பிரதீப் வெற்றியாளராகத் திகழ்கிறார். தொடர்ந்து அவர், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி (LIK) என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது. எனவே, இப்படமும் வெற்றி பெற்று, பிரதீப்புக்கு ஹாட்ரிக் ஹிட்டாக அமையும் எனவும் கோலிவுட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

  • Good Bad Ugly Second Song Promo மாமே சவுண்ட் ஏத்து..தெறிக்க விடும் அனிருத்..’குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய அப்டேட்.!
  • Leave a Reply