வாழ்க்கை ஒரு வட்டம்…திடீரென ஆமீர் கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன்.!
Author: Selvan24 February 2025, 1:00 pm
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன்
இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு போட்டுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ‘லவ் டுடே’ படம் தமிழில் பயங்கர ஹிட் அடித்தது,இப்படத்தை இவர் இயக்கியது மட்டுமில்லாமல் அதில் நடித்தும் இருந்தார்,இப்படத்தை ரீமேக் செய்து ஹிந்தியில் ‘லவ்யபாவ்’ என்று வெளியானது.
இதில் ஹீரோவாக ஆமிர் கானின் மகன் ஜுனைத் கான் மற்றும் ஸ்ரீ தேவியின் இளைய மகள் குஷி கபூர் நடித்திருந்தனர்,ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஹிந்தியில் ஜொலிக்கவில்லை.
இதையும் படியுங்க: கணவருடன் கவர்ச்சி குத்தாட்டம்… நைட் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ்!
இந்த நிலையில் சமீபத்தில் ஆமிர் கானை சந்தித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்,அந்த போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்து அதில் “வாழ்க்கை நான் எப்போதும் சொல்லுவது போல் கணிக்க முடியாதது,உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி,வாழ்நாள் முழுவதும் இந்த சந்திப்பை மறக்க மாட்டேன்” என நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து,தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்,இவருடைய நடிப்பில் கடந்த பெப்ரவரி 21 ஆம் தேதி வெளிவந்த டிராகன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.