ஒரு படம் ஹிட் ஆனதும் குளிர் விட்டு போச்சு… விஜய்யை அசிங்கப்படுத்திய பிரதீப் ரங்கநாதன்!

Author: Shree
3 June 2023, 11:45 am

தமிழ் சினிமாவில் குறும்படம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து நல்ல வரவேற்பு பெற்றவர் இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். தனது 20 வயதிலே கோமாளி படத்தினை இயக்கியிருந்த பிரதீப், லவ் டுடே என்ற படத்தினை எடுத்து மாபெரும் வெற்றியை பெற்று ஹிட் இயக்குனராக முத்திரைகுத்தப்பட்டார்.

இவரது படங்களில் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இளைஞர்கள் பெரும்பாலும் விரும்பி பார்ப்பது போன்று முழு முழுக்க காமெடி ஜானரில் படமெடுத்து வித்யாசம் காட்டுவதே பிரதீப்பின் ஸ்டைல். இது தான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. லவ் டுடே எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்கள் கடந்து திரையரங்கில் ஓடி வசூல் சாதனை படைத்தது.

அந்த படத்திற்கு பின்னர் நிறைய டாப் ஹீரோக்களின் படங்களை இயக்க பிரதீப் ரங்கநாதனுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அப்படித்தான் விஜய்யை வைத்து படம் இயக்க பிரதீப் ரங்கநாதனுக்கு வாய்ப்பு வீடு தேடி வந்ததாம். ஆனால், அவர் விஜய்யை வச்சியெல்லாம் படமெடுக்க எனக்கு விருப்பம் இல்லை. அவருக்கு போட்டியாக பெரிய ஹீரோவாகுவதே என் கனவு. அதனால் நானா இப்போதைக்கு ஹீரோவாக நடித்து நம்பர் ஒன் ஹீரோவாகவேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறேன் என கூறி இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார். ஒரே ஒரு படத்திலே சாருக்கு குளிர் விட்டு போச்சு என கோலிவுட் சினிமா பிரதீப்பை விமர்சித்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ