பழசெல்லாம் கிளறாதீங்கயா… பதுங்கிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் : இதுதான் காரணமா?

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2022, 5:55 pm

சச்சின் டெண்டுல்கர் முதல் யுவன் சங்கர் ராஜா வரை பலரையும் படு மோசமாக விமர்சித்து லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் போட்டுள்ள பழைய சோஷியல் மீடியா போஸ்ட்டுகளை கிண்டி எடுத்து நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

ஏற்கனவே கோமாளி படத்தில் பிரதீப் ரஜினிகாந்தை படு கேவலமாக ட்ரோல் செய்ததற்கு எதிராக ரஜினி ரசிகர்கள் அவர்கள் வெளுத்த நிலையில், தற்போது சினிமா மற்றும் விளையாட்டு என எல்லா சைடும் பிரதீப்பை பிரித்து மேய்ந்து வருகின்றனர்.
கோமாளி படத்திலேயே பிரதீப் ரங்கநாதன் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பயணத்தையும், பேத்தி வயது பெண்ணுடன் டூயட் பாடுகிறார் என்றும் படு கேவலமாக கலாய்த்து காட்சிகளையும், பாடல் வரிகளையும் வைத்திருப்பார்.

அப்போதே அவருக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தி என ரஜினி ரசிகர்கள் வெளுத்து வாங்கினர். சமீபத்தில் லவ் டுடே வெற்றிப்பெற்ற நிலையில், ரஜினிகாந்த் பரந்த மனதுடன் வீட்டிற்கே அழைத்து வாழ்த்தினாலும், ரஜினி ரசிகர்களின் கோபம் கொஞ்சமும் தணியவில்லை.

லவ் டுடே படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா எல்லாம் என் படத்துக்கு இசையமைப்பார் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை என புகழ்ந்து பேசியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். ஆனால், அவரது பழைய போஸ்ட்டில் யுவன் ஒரு ஃபிராடு என போஸ்ட் போட்டிருப்பதை எடுத்து போட்டு யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் தற்போது லவ் டுடே இயக்குநரை அசிங்கமாக திட்டி வருகின்றனர்.

பிஜிஎம் கிங் என கொண்டாடப்படும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அஜித்தின் மங்காத்தா படத்தின் பிஜிஎம் காப்பி என அப்போது பிரதீப் ரங்கநாதன் போட்ட போஸ்ட்டையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தற்போது அஜித் ரசிகர்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதனை பிரித்து மேய்ந்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்களை தாண்டி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஒரு சுயநலவாதி என பீப் வசனத்தால் எல்லாம் திட்டித் தீர்த்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இப்படியொரு மனநிலை கொண்டவரின் படத்தையா எல்லாரும் போய் பார்த்து ஹிட் ஆக்குறீங்க என சோஷியல் மீடியாவில் பிரதீப் ரங்கநாதனுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் முன்னதாக செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

பிரபலங்கள் குறித்து இளம் வயதில் ஆவேசத்துடன் பிரதீப் ரங்கநாத போட்ட போஸ்ட்டுகளுக்கு மன்னிப்பு கேட்பாரா? என கேள்விகள் கிளம்பி உள்ளன. இதெல்லாம் உண்மையாகவே அவர் போட்ட பதிவுகளா? அல்லது எடிட் போஸ்ட்டா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனத பேஸ்புக் கணக்கை டெலிட் செய்துள்ளார். தோண்ட தோண்ட நிறைய பதிவுகளால் தனது கேரியருக்கு ஆபத்து வந்துவிடுமோ என பயந்து பிரதீப் ரங்கநாதன் தனது முகநூல் பக்கத்தை டெலிட் செய்து விட்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 435

    0

    0