லவ் டுடே படத்தின் வசூல் இவ்ளோவா?.. டாப் ஹீரோக்களுக்கு இணையான கலெக்ஷன்..!
Author: Vignesh5 November 2022, 8:30 pm
இந்த வாரம் திரையரங்குகளில் காஃபி வித் காதல், நித்தம் ஒரு வானம், லவ் டுடே ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. மூன்று படங்களுக்குமே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
லவ் டுடே திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்களிடம் வரவேற்பு
ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான கோமாளி திரைப்படம், 50 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்துள்ள லவ் டுடே படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
பிரதீப் ரங்கநாதனுடன் சத்யராஜ், ராதிகா, இவானா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லவ் டுடே பாக்ஸ் ஆபிஸ் ஏற்கனவே லவ் டுடே படத்தின் ட்ரெய்லர், பாடல்களுக்கு நல்ல ரீச் கிடைத்ததால், முதல் நாளிலேயே சூப்பர் ஓப்பனிங் கிடைத்துள்ளது.
இதனால், முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வசூலில் கெத்து காட்டியுள்ளது லவ் டுடே. அதன்படி, முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 2.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள லவ் டுடே, உலகம் முழுவதும் மொத்தம் 3 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
படத்தின் மொத்த பட்ஜெட்டே 10 கோடி ரூபாய் தான் என்ற நிலையில், ஓடிடி ரைட்ஸையும் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஃபி வித் காதல் கலெக்ஷன்
சுந்தர் சி இயக்கியுள்ள ‘காஃபி வித் காதல்’ படமும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுந்தர் சி-யின் டிரேட் மார்க் படமாக உருவாகியுள்ள இந்தப் படம், ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நித்தம் ஒரு வானம் கலெக்ஷன்
அதேபோல், அசோக் செல்வன் நடித்துள்ள ‘நித்தம் ஒரு வானம்’ படமும் நேற்று வெளியாகியுள்ளது. ர.கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவதா, சிவாத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். ஃபீல்குட் படமாக வெளியாகியுள்ள ‘நித்தம் ஒரு வானம்’ பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், நித்தம் ஒரு வானம் படம் முதல் நாளில் 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.