போதும் போதும்… இப்போதான் ஆரம்பிச்சு இருக்கேன்.. முடிச்சு விட்றாதீங்க: பதறிய ‘லவ் டுடே’ இயக்குனர்..! இது தான் காரணமா..?

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ‘கலகத் தலைவன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மிஷ்கின், மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேச வரும் போது மாஸ் ஹீரோக்களுக்கு கிடைக்கும் அளவிற்கு ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.

இதனால் பதறிய பிரதீப் ரங்கநாதன், ‘ போதும் போதும். மாட்டி விட்றாதீங்க. இப்போதான் ஆரம்பிச்சு இருக்கேன் என தனது பாணியில் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் உதயநிதி ஸ்டாலின் சாருக்கு முதல்ல நன்றி. ‘லவ் டுடே’ படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைச்சு இருக்குறதுக்கு நீங்களும் ஒரு காரணம். படத்தை பார்த்துட்டு சார் எனக்கு கால் பண்ணி, நல்லா வந்து இருக்குறதா பாராட்டுனாரு. பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டேன்.

‘கலகத் தலைவன்’ டிரெய்லர் சூப்பரா வந்துருக்கு. மகிழ் திருமேனி சார் வொர்க்குக்கு நான் பெரிய பேன் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் ‘கலகத் தலைவன்’ படம் வரும் நவம்பர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

3 minutes ago

திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…

25 minutes ago

திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வைக்காதீங்க.. யாரு சங்கினே தெரியாது : சர்ச்சை கிளப்பிய ஆ. ராசா!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…

50 minutes ago

சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…

54 minutes ago

சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…

1 hour ago

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

2 hours ago

This website uses cookies.