நான் செய்தது மிகப்பெரிய தவறு…வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்.!
Author: Selvan21 March 2025, 2:04 pm
சூதாட்ட செயலி வழக்கில் சிக்கிய பிரகாஷ்ராஜ்.!
தெலங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா,சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்கள் மீது சைபராபாத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படியுங்க: பெரும் சோகம்.!ரஜினி பட இயக்குனர் திடீர் மரணம்…!!
இந்த புகாரின் அடிப்படையில்,நடிகர்கள் பிரகாஷ் ராஜ்,விஜய் தேவரகொண்டா,ராணா டகுபதி, நிதி அகர்வால் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்கள் என மொத்தம் 25 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரத்திற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு சூதாட்ட செயலி விளம்பர ஒப்பந்தம் கிடைத்ததை ஏற்றுக்கொண்டதாகவும்,அதில் சூதாட்ட செயலியின் விளம்பரம் செய்ததாகவும் கூறினார்.சில மாதங்களுக்கு பிறகு,அது தவறானது என்று உணர்ந்தாலும்,ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளியேற முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
மீண்டும் 2017-ஆம் ஆண்டில்,விளம்பர ஒப்பந்தத்தை புதுப்பிக்க என்னிடம் வந்தபோது, நான் அதை மறுத்துவிட்டேன்,2021-ஆம் ஆண்டு வேறு ஒரு நிறுவனம் அந்த செயலி நிறுவனத்தை வாங்கிய பிறகு,என்னுடைய பழைய விளம்பர வீடியோக்களை மீண்டும் பயன்படுத்தினார்கள்,இது குறித்து என்னுடைய எதிர்ப்பை தெரிவித்து,அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதும்,அந்த நிறுவனம் விளம்பரங்களை நிறுத்தினார்கள்.
My response 🙏🏿🙏🏿🙏🏿 #SayNoToBettingAps #justasking pic.twitter.com/TErKkUb6ls
— Prakash Raj (@prakashraaj) March 20, 2025
நான் செய்தது தவறு தான்,ஆனால் அதை நான் உணர்ந்த பிறகு அதில் இருந்து வெளியே வந்து விட்டேன் என அந்த வீடியோவில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.