தெலங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா,சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்கள் மீது சைபராபாத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படியுங்க: பெரும் சோகம்.!ரஜினி பட இயக்குனர் திடீர் மரணம்…!!
இந்த புகாரின் அடிப்படையில்,நடிகர்கள் பிரகாஷ் ராஜ்,விஜய் தேவரகொண்டா,ராணா டகுபதி, நிதி அகர்வால் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்கள் என மொத்தம் 25 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்திற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
2016-ஆம் ஆண்டு சூதாட்ட செயலி விளம்பர ஒப்பந்தம் கிடைத்ததை ஏற்றுக்கொண்டதாகவும்,அதில் சூதாட்ட செயலியின் விளம்பரம் செய்ததாகவும் கூறினார்.சில மாதங்களுக்கு பிறகு,அது தவறானது என்று உணர்ந்தாலும்,ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளியேற முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
மீண்டும் 2017-ஆம் ஆண்டில்,விளம்பர ஒப்பந்தத்தை புதுப்பிக்க என்னிடம் வந்தபோது, நான் அதை மறுத்துவிட்டேன்,2021-ஆம் ஆண்டு வேறு ஒரு நிறுவனம் அந்த செயலி நிறுவனத்தை வாங்கிய பிறகு,என்னுடைய பழைய விளம்பர வீடியோக்களை மீண்டும் பயன்படுத்தினார்கள்,இது குறித்து என்னுடைய எதிர்ப்பை தெரிவித்து,அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதும்,அந்த நிறுவனம் விளம்பரங்களை நிறுத்தினார்கள்.
நான் செய்தது தவறு தான்,ஆனால் அதை நான் உணர்ந்த பிறகு அதில் இருந்து வெளியே வந்து விட்டேன் என அந்த வீடியோவில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கவில்லை மலையாள திரைப்பட உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'எம்புரான்' திரைப்படம் மார்ச் 27 அன்று…
சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி, தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம் ஜீ தமிழ்…
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் எஸ்ஐ, பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் அத்துமீறலில்…
IPL சரவெடி ஆரம்பம் 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரிமியர் லீக் இன்று (மார்ச் 22) முதல் கோலாகலமாக தொடங்க…
காவிரி பிரச்னைக்கு டிகே சிவகுமாரை அழைத்து வந்து ஆலோசனை நடத்துவீர்களா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி…
This website uses cookies.