திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா?.. மனம் திறக்கும் பிரகாஷ் ராஜ் முதல் மனைவி லலிதா குமாரி..!

Author: Vignesh
21 May 2024, 7:49 pm
Lalitha Kumari-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். வில்லனாக நடித்து தமிழக மக்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். அந்தப் படத்தில் அசால்டாக நடித்து மக்களிடையே பாராட்டுக்களை பெற்றார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பில் கவனம் செலுத்தி கொண்டிருந்தாலும் இந்திய அரசியலில் நிகழும் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக பாஜக-விற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், 1994 இல் பிரகாஷ்ராஜ் லலிதா குமாரியை திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், 16 ஆண்டுகளுக்கு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர்.

Lalitha Kumari-updatenews360

அதன்பின்னர் போனிவர்மா என்ற நடன இயக்குனரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்று வாழ்ந்து வருகிறார். பொதுவாக, சினிமாவை பொறுத்தவரை பிரபலங்கள் விட்டு பிரிந்து சென்றால், அவர்களைப் பற்றி மோசமாக பேசுவார்கள். ஆனால், சமீபத்தில் பிரகாஷ்ராஜின் முன்னால் மனைவி அவரை புகழ்ந்து பேசி இருப்பது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lalitha Kumari-updatenews360

விவாகரத்து பெற்று பிரிந்தோமே தவிர தன் குழந்தைகளுக்கு பிரகாஷ்ராஜ் தான் தந்தை என்றும், அந்த விஷயத்தில் தன்னைவிட அவர் தெளிவாக தான் இருப்பதாகவும், இன்று வரை குழந்தைகளுக்கு தேவையானவற்றை மிக சரியாக செய்து வருவதாகவும், 16 வருடங்கள் தாங்கள் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்தது உண்மைதான் என்றும், அவரைப் பற்றி என்றுமே தவறாக பேச மாட்டேன் என்று பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி லலிதா குமாரி தெரிவித்துள்ளார்.

Lalitha Kumari-updatenews360

மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!

மேலும், முன்னாள் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில், லலிதா குமாரி இன்னும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை பேசுகையில், நான் என் முதல் திருமண வாழ்க்கையில் உண்மையாகத்தான் இருந்தேன். விவாகரத்து நடந்தாலும், அந்த திருமண வாழ்க்கை சிறப்பாக எனக்கு அமைந்தது. அதை தவிர்த்து, வேறொரு வாழ்க்கை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று எமோஷனலாக லலிதா குமாரி பேசி உள்ளார்.

Views: - 108

0

0