நீ என்னை ஏமாத்திட்ட.. மன அழுத்தத்தில் கத்திய பிரகாஷ் ராஜின் முதல் மனைவி..!
Author: Vignesh9 March 2024, 6:48 pm
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். வில்லனாக நடித்து தமிழக மக்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். அந்தப் படத்தில் அசால்டாக நடித்து மக்களிடையே பாராட்டுக்களை பெற்றார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பில் கவனம் செலுத்தி கொண்டிருந்தாலும் இந்திய அரசியலில் நிகழும் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக பாஜக-விற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், 1994 இல் பிரகாஷ்ராஜ் லலிதா குமாரியை திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், 16 ஆண்டுகளுக்கு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர்.
அதன்பின்னர் போனிவர்மா என்ற நடன இயக்குனரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்று வாழ்ந்து வருகிறார். பொதுவாக, சினிமாவை பொறுத்தவரை பிரபலங்கள் விட்டு பிரிந்து சென்றால், அவர்களைப் பற்றி மோசமாக பேசுவார்கள். ஆனால், சமீபத்தில் பிரகாஷ்ராஜின் முன்னால் மனைவி அவரை புகழ்ந்து பேசி இருப்பது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து பெற்று பிரிந்தோமே தவிர தன் குழந்தைகளுக்கு பிரகாஷ்ராஜ் தான் தந்தை என்றும், அந்த விஷயத்தில் தன்னைவிட அவர் தெளிவாக தான் இருப்பதாகவும், இன்று வரை குழந்தைகளுக்கு தேவையானவற்றை மிக சரியாக செய்து வருவதாகவும், 16 வருடங்கள் தாங்கள் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்தது உண்மைதான் என்றும், அவரைப் பற்றி என்றுமே தவறாக பேச மாட்டேன் என்று பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி லலிதா குமாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விவாகரத்துக்கு பின்னர் மிக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அப்போது அவர் என்னை ஏமாற்றி விட்டதாக நினைத்து கத்துவேன் என் அக்கா, அண்ணன் என்று என் குடும்பத்தினர் தான் என்னோடு உடன் இருந்தார்கள். அதுமட்டுமின்றி, நாட்கள் செல்ல செல்ல இரு மகள்கள் கூட இருந்தது மிகப்பெரிய பக்கபலமாக எனக்கு இருந்தது. இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்து விட முடியாது. ஏனென்றால், இந்த உலகத்திற்கு தனியாக தான் வந்தோம்.
தனியாக தான் போகிறோம் இதற்கிடப்பட்ட காலத்தில், வரும் உறவுகள் நிலையானது கிடையாது என்பதை நான் புரிந்து கொண்டேன் என்று தன் வாழ்க்கையில் ஏற்பட்ட விஷயத்தை பிரகாஷ்ராஜின் முதல் மனைவி லலிதா பகிர்ந்திருக்கிறார்.