முட்டை கண்ணு முழி அழகியாக தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் அழகால் வசீகரித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக இருந்தார். பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் என்னும் இரு படங்களில் நடித்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு, பாலிவுட் என சென்றுவிட்ட இவர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வாய்ப்பு கிடைக்காததால் குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார்.
தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட், விளம்பர படங்களில் நடித்து வந்த பிரணிதா படவாய்ப்புகள் இல்லாததால் தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தார். இந்நிலையில் பிரணிதா கணவருக்கு பாத பூஜை செய்த போட்டோவை வெளியிட்டு, ” பீமனா அமாவாசையை முன்னிட்டு இன்று காலை பூஜை.
உங்களுக்கு, இது ஆணாதிக்கம் போன்று தெரியலாம் (கடந்த ஆண்டு வந்த பூஜை செய்ததற்கு ஆணாதிக்கம் மீம்ஸ் நிறைய வந்தது), ஆனால் எனக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சனாதன தர்மத்தில், பெரும்பாலான சடங்குகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதற்கு ஒரு கதை உள்ளது. மேலும் இந்து சமய சடங்குகள் ஆணாதிக்கமானது என்று வாதிடுவது முற்றிலும் ஆதாரமற்றது. ஏனெனில் இது தெய்வங்களை சமமாக வழிபடும் சில நம்பிக்கைகளில் ஒன்றாகும். அவ்வளவு ஏன்? இந்து மதத்தில் பெண் கடவுள்களும் சமமாக வணக்கப்படுவது தெரியும்” என பிரணிதா பதிவிட்டு இருக்கிறார். இதற்கு நிறைய லைக்ஸ் குவிந்து ” நடிகையா இப்படியெல்லாம் பண்றாங்க என ஆச்சர்யத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.