மீனா மீது அப்படி ஒரு காதல்… பித்து பிடித்து அலைந்த பிரபல நடிகர் – கேட்டதும் அதிர்ந்துப்போன மனைவி!

Author: Shree
15 May 2023, 11:56 am

1982ஆம் ஆண்டு நெஞ்சங்கள் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

இந்நிலையில் மீனா 40 ஆண்டு கால சினிமா பயணம் குறித்து அண்மையில் நடைபெற்ற கௌரவ விழாவில் பேசிய நடிகர் பிரசன்னா… நான் மீனாவின் பெரிய ரசிகன். எந்த அளவுக்கு என்றால், அவருடன் ரஜினியை தவிர வேறு யாரும் நடித்திடவே கூடாது. அப்படி நடித்தால் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவ்வளவு possessive. எஜமான் படம் வெளியான போது சென்னையில் டிக்கெட் கிடைக்காததால் டிக்கெட் கூட எடுக்காமல் ரயிலில் பயணம் செய்து கரூர் சென்று அங்கு படம் பார்த்தேன். எனக்கு மீனா மீது அப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான அன்பு எனக்கூறினார்.

மேலும் பேசிய பிரசன்னாவின் மனைவியும் நடிகையுமான சினேகா, நான் சினிமாவில் வருவதற்கு முன்னரே மீனா என் குடும்ப நண்பராக இருந்தார். நான் முதல் படத்தில் நடித்தபோது அவர் தான் எனக்கு மேக்கப் குறித்த பல்வேறு விஷயங்களை கற்றுக்கொடுத்தார். அன்று முதல் இன்றுவரை அதே அடக்கம் அமைதியுடன் இருந்து வருகிறார். மனதளவில் அவர் இன்னும் 4 வயது innocent குழந்தை தான் என பெருமையாக பேசினார்.

https://www.facebook.com/watch/?v=1889343634791652&ref=sharing

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?