Honeymoon’ல் சினேகா போட்ட கண்டிஷன்… உயிரை பனைய வைத்த பிரசன்னா!

Author: Shree
18 April 2023, 1:14 pm

2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

இந்நிலையில் சினேகா – பிரசன்ன ஜோடி குறித்த ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது சினேகா திருமணம் ஆன புதிதில் கணவர் பிரசன்னாவுடன் நியூசிலாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளார். அப்போது பிரசன்னா குஷி பட விஜய் போல Bungee jumping செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு கேட்டாராம்.

அதற்கு சினேகா ஒரு டீல் செய்துள்ளார். அதாவது என் பெயரை டாட்டூ போட்டால் Bungee jumping செய்ய ஒப்புக்கொள்கிறேன் என கூறினாராம். அதை கேட்டு உடனே பிரசன்னா அங்கிருந்த டாட்டூ கடையில் டாட்டூ போட்டுக்கொண்டு இப்போ வா போலாம் என கூப்பிட பின்னர் இருவரும் Bungee jumpingல் குதித்து இருக்கின்றனர் அது நியாபகர்த்தமான சம்பவம் என சினேகா பேட்டிகளில் கூட கூறியிருக்கிறார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்