விவாகரத்து ஆனாலும் விடமாட்டேன்.. விடாமல் துரத்திய பிரசாந்த் பட நடிகை!
Author: Udayachandran RadhaKrishnan12 November 2024, 10:46 am
பிரசாந்த்துக்கு ஜோடியாக நடித்த நடிகை தனது கணவருக்கு விவாகரத்து கொடுத்தது மட்டுமல்லாமல் அவர் இருக்கும் வீட்டின் அருகே வீடு வாங்கி குடியிருந்து வருகிறார்.
காதல் கணவருடன் விவாகரத்து
அந்த நடிகை காதல் கவிதை படத்தில் நடித்த இஷா கோபிகர். இவர் விஜய் நடித்த நெஞ்சினிலே, என் சுவாசக் காற்றே, நரசிம்மா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2009ஆம் ஆண்டு தொழிலதிபர் டிம்மி நரங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.
இதையும் படியுங்க: ஐஸ்வர்யா ராயை கணவருடன் சேர்த்து வைக்கும் மணிரத்தினம் – ஓஹோஹ் விஷயம் அப்படி போகுதா?
இந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ இருவரும் முடிவு செய்தனர். விவாகரத்தும் கிடைத்துவிட்டது.
கணவர் வீட்டருகே குடியேறிய நடிகை
தனது மகளை அழைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார் இஷா. இது குறித்து அவர் மன வருத்தத்துடன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நான் 10 வயது மகளுடன் வெளியே வந்துவிட்டேன். அவள் சொகுசாக வாழ்ந்து வந்தவர், வெளியில் என்னோட வாழ்க்கைக்க அவர் அடாப்ட் ஆகுவாரா என தெரியவில்லை.
நண்பர்கள், பெற்றோர்கள்
எனக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லை. ஆனால் கணவர் கேட்டதால் கொடுத்துவிட்டேன். நான் நினைத்தால் கொடுக்காமல் இருந்திருக்க முடியும், யாரையும் வற்புறுத்துவது என் பழக்கம் கிடையாது.
இதனால் என் கணவர் வாழும் வீடு அருகே நான் குடிபுகுந்தேன். தற்போது என் மகளுக்கு நாங்கள் நல்ல பெற்றோர்களாக இருக்க ஆசைப்படுகிறோம். இதை தவிர நானும் என் கணவரும் நல்ல நண்பர்கள்தான் என கூறியுள்ளார்.