கஷ்டகாலத்தில் கதவு தட்டி உதவி கேட்ட விக்ரம்… உதாசீனப்படுத்திய உறவுக்கார நடிகர் இப்போ நடுத்தெருவுக்கே வந்துட்டார்!

Author: Shree
1 September 2023, 6:14 pm

படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள் , பிதாமகன் , அந்நியன் , தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

படத்திற்கு படம் தனது முழு உழைப்பை போட்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்காக தனது இயக்குனர் எப்படி கேட்கிறாரோ அப்படி உடலை வருத்தி திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் விக்ரம். திரைத்துறையில் போட்டிகள் பொறாமைகள் இன்றி ஜீரோ ஹேட்டர்ஸ் என்ற பெயரெடுத்திருக்கிறார்.

இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் விக்ரம் ஆரம்ப காலத்தில் படவாய்ப்பிற்காகவும், தனது திறமையை வெளிப்படுத்தவும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அப்போது தனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் வாய்ப்பு கேட்டு கெஞ்சியுள்ளார். அப்படித்தான் நடிகர் பிரசாந்த் விக்ரமுக்கு உறவுக்காரராம். விக்ரமும் பிரசாந்தும் ஒரே நேரத்தில் திரைத்துறைக்கு வந்தவர்கள் தான்.

ஆனால், பிரசாந்தின் அப்பா மிகப்பெரிய தயாரிப்பாளார் என்பதால் அவர் தன் மகனை சீக்ரத்திலே வளர்த்துவிட்டார். அந்த சமயத்தில் வாய்ப்பில்லாமல் இருந்த விக்ரம் பிரசாந்த் வீட்டு கதவை தட்டி வாய்ப்பு கேட்டாராம். ஆனால் அவரது குடும்பமே விக்ரமை உதாசீனப்படுத்திவிட்டார்களாம்.

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு படத்திற்கு படம் தனது உழைப்பை அதிகப்படுத்தி முன்னணி நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார் விக்ரம். ஆனால், பிரசாந்த் இன்று அட்ரசே இல்லாமல் போய்விட்டார். இதனால் தியாகராஜன் குடும்பமே விக்ரமை பார்த்தால் தலைகுனிந்து செல்கிறார்களாம்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!