பிரசாந்துக்கு எதிராக குவியும் கண்டனங்கள்.. இப்படி பண்ணலாமா? செக் வைக்கும் சமூக ஆர்வலர்கள்..!

Author: Vignesh
1 August 2024, 9:49 am

நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் பிரசாந்த் கார் ஓட்டிக்கொண்டே பேட்டி அளித்த காட்சிகள் சமீபத்தில் வெளியானது.

மேலும், நகைக்கடை திறப்பு விழா மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தது என ஃபுல் ஃபார்மில் வந்து அடிக்கடி ரசிகர்களுக்கு காட்சி தந்து வருகிறார் பிரசாந்த். காரில் பேட்டி அளித்த நடிகர் பிரசாந்த் தற்போது, பைக் ஓட்டிக்கொண்டே பேட்டி கொடுத்த புதிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானது.

தனது அப்பா சிறுவயதில், ஆர்எக்ஸ் 100 பைக் வாங்கி கொடுத்தார் என்றும், நான்கு நாட்களில் பைக் ஓட்ட கற்றுக் கொண்டேன் என்றதும் அதை உடனே விற்று விட்டார் என்பது முதல் முதலில் பைக் ஓட்டிய அனுபவங்களை அந்த பேட்டியில் ஷேர் செய்திருந்தார்.

பைக்கில் அனைவருக்கும் ஹாய் என்று சொல்லிக் கொண்டே செல்வதை பார்த்த நெட்டிசன்கள் ஹெல்மெட் அணியாமல் இப்படி பைக் ஓட்டலாமா பிரஷாந்த் என்று கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் சிலர் சோசியல் மீடியாவில் பிரசாந்த்தின் இந்த பைக் வீடியோ பேட்டிக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 319

    0

    0