நடிகர் பிரசாந்த்-க்கு திருமணம்..? யார் அந்த பெண்.?

Author: Rajesh
22 March 2022, 1:07 pm

வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் 17 வயதில் ஹீரோவாக களமிறங்கியவர் நடிகர் பிரசாந்த். இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் என்ற பெருமையோடு சினிமாவில் வலம் வந்தார். காதல் படங்களே நடித்து வந்த பிரசாந்த் 90களில் சாக்லெட் பாயாக வலம் வந்தார். செம்பருத்தி, திருடா திருடா, ஜீன்ஸ், பூமகள் ஊர்வலம், கண்ணெதிரே தோன்றினால், ஜோடி, அப்பு அவரது நடிப்பில் வெளியான படங்கள் இப்போதும் ஹிட்டாக ஓடும்.

இவருக்கு 2005ம் ஆண்டு கிரஹலட்சுமி என்பவருடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது, இவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற நீதிமன்றம் சென்றார் பிரசாந்த்.

காரணம் 1998ம் ஆண்டே கிரஹலட்சுமிக்கு வேணு கோபால் என்பவருடன் திருமணம் நடத்திருப்பதை மறைத்துள்ளார்கள். இந்த பிரச்சனைகளுக்கு படங்களை நடிப்பதை குறைத்துக் கொண்ட பிரசாந்த் கடந்த சில வருடங்களாக தான் நடிக்க தொடங்கியுள்ளார்.இந்த நிலையில் பிரசாந்த் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. விரைவில் நிச்சயதார்த்தம் என்கின்றனர் ஆனால் பெண் யார், எப்போது திருமணம் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1593

    11

    3