கல்யாணத்துக்கு முன்னாடி அந்த மாதிரி இருந்தோம்.. – அந்தரங்க விசயத்தை கூறிய பசங்க பட நடிகரின் மனைவி..!

Author: Vignesh
16 June 2023, 10:28 am

கடந்த 2009ஆம் ஆண்டு பள்ளிப்பருவ பிள்ளைகளையும் அவர்களின் வளர்ப்பும் குறித்து வெளியான படம் ” பசங்க ” பாண்டிராஜ் இயக்கி இருந்த இப்படத்தில் தான் விமல் அறிமுகமானார். இதில் குழந்தை நட்சத்திரமாக அன்புக்கரசு வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்திருந்தார்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிசோடா, சகா போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். இதனிடையே பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து கொண்டிருப்பதாக சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

ப்ரீத்தி லட்சிமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ பல ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் கிஷோரை விட 4 வயது மூத்தவர் என்பதால் இவர்களது காதலை நெட்டிசன்ஸ் விமர்சித்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்நிலையில் இந்த ஜோடி பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு கலகலப்பாக பேட்டி கொடுத்துள்ளனர். அப்போது, திருமணத்தை உடனே செய்ய காரணம் ப்ரீத்தியின், தந்தை நான்கு வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் தான் திருமணத்தை உடனடியாக நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக தெரிவித்தார்.

மேலும் முதல் லிப் லாக் எங்கே எப்போது எந்த மாதிரி நேரத்தில் என்று கேள்விக்கு காரில் தான் அண்ணா நகர் ரோட்டில் எதிர்பார்க்காத ஒரு நேரத்தில் யார் முதலில் என்ற சமயத்தில் நடந்தது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

pasanga-updatenews360

மேலும் கிடைக்கும் நேரத்தில் அதிலும் யாரும் இல்லாத சமயத்தில் கூட முத்தம் கொடுத்து இருக்கிறோம் என்றும், தனது அந்தரங்க விஷயத்தை பிரீத்தி மற்றும் கிஷோர் வெளிப்படையாக கூறியுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 527

    0

    0