வேற வழி இல்லாம, அதை பண்ணேன்.. ஆனா அவரு.. புட்டு புட்டு வைத்த ப்ரீத்தி சர்மா..!

Author: Vignesh
2 October 2023, 11:30 am

தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

Preethi Sharma-updatenews360

இதனிடையே, சீரியல் நடிகைகள் தற்போது தங்களுக்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்தவகையில், லிப்லாக் காட்சிகள் சமீப காலமாக இடம் பெற்று வருவது அனைவரும் அறிந்த விஷயம். அதிலும் குழந்தைகள் பார்க்கும் சீரியல்களில் லிப்லாக் காட்சிகள் சமீபகாலமாக இடம்பெற்று வருகிறது.

Preethi Sharma-updatenews360

இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ப்ரீத்தி சர்மா இயக்குனர்களிடம் இதுபற்றி கூறி இது அவசியமா என்றும் தவிர்க்கவும் பார்ப்போம். ஆனால், தனிப்பட்ட சினிமா வாழ்க்கை கேரியர்காகவும், இது எல்லாம் சகித்துக் கொண்டு இயக்குனர்கள் சொல்வதை செய்தாக வேண்டிய நிலையில் தான் சீரியல் நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால், லிப்லாக் காட்சிகளில் ஷூட்டிங்கில் படபடப்பாகவும், கூச்சமாகவும் வெட்கமாகவும் தான் இருக்கும். இதை எல்லாம் தாண்டி அந்த காட்சியில் நடித்து கொடுப்போம் என்று ப்ரீத்தி சர்மா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!