திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் : புகைப்படத்துடன் முன்னணி நடிகை போட்ட பதிவு.. ரசிகர்கள் ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2022, 4:19 pm

திருமணம் செய்யாத முன்னணி நடிகை ஒருவர் இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன்.தனது எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

குழந்தை நட்சத்திரமாக ஹனுமான் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் இவர்.பின்னர் தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாள மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் இவர் 180 படத்தின் மூலம் சினிமாவுக்குள் களம் இறங்கினார்.அதன்பின் வெப்பம் படத்தில் நடித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவர் தமிழ் மொழியை விட பிற மொழி சினிமாக்களில் அதிக கவனம் செலுத்துபவர் இவர்.

தமிழில் நல்ல கதாபாத்திரம் வந்தால் மட்டுமே நடிக்க கூடியவர்.அதன்படி அண்மையில் இவர் நடித்த சைக்கோ மற்றும் திருச்சிற்றம்பலம் படம் பெரும் வரவேற்பினை பெற்றது.

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார் ,கர்ப்பமாக இருப்பதை அறிய உதவும் கருவி மூலம் அறிந்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருமணம் ஆகாமல் எப்படி கர்ப்பமாக முடியும் என கூறி வருகின்ற நிலையில் சிலர் இது படத்தின் ப்ரோமோஷனுக்காக பதிவிட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!