கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா? அந்த காட்சிகளில் நடிக்கிறாரா தீபிகா படுகோன்..!
Author: Vignesh18 April 2024, 2:41 pm
பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் விளம்பர பட நடிகையாக நடித்து பின்னர் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் தொழில் துறையில் சேர்ந்தார்.
2006 ஆம் ஆண்டில் முதன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி படத்தோடு இந்தியா முழுவதும் அறிமுகம் பெற்றார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தேடி கொடுத்தது.
மேலும் படிக்க: நான் அங்கிளின் அசிஸ்டண்ட் இல்லை.. புது மாப்பிள்ளையுடன் ஷங்கர் அளித்த பிரஸ்மீட்..!
அதன் பிறகு இந்தியில் பல்வேறு வெற்றித்திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இடம் பிடித்துவிட்டார். பின்னர் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தீபிகா படுகோனுக்கு ஏற்கனவே பல காதல் தோல்விகள் இருந்துள்ளது.
குறிப்பாக அவர் ரன்பீர் கபூரை பல ஆண்டுகள் காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டார். அந்த சமயத்தில் தீபிகா படுகோன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பரவியது. அதன் பின்னர் தீபிகா ரன்வீர் சிங் மீது காதல்வயப்பட்ட பின்னர் தான் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். தற்ப்போது வரை அவரை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறார்.
மேலும் படிக்க: சரிகாவா இது?.. என்ன ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்க.. வைரல் புகைப்படம்.!
இந்நிலையில், தீபிகா படுகோன் கடைசியாக நடித்த பைட்டர் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, தற்போது தீபிகா படுகோன் சிங்கம் அகைன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது காவல்துறை அதிகாரியாக காக்கி உடையில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார். இந்த போட்டாவை பார்த்த ரசிகர்கள் பலரும், என்னது தீபிகா ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறாரா என ஷாக்காகி உள்ளனர்.
மேலும், தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், சிங்கம் அகைன் படத்தில் நடிக்க துவங்கிவிட்டார். ஆனால், ரசிகர்களோ, இதுபோன்ற ஆக்ஷன் காட்சிகளில் கர்ப்பமாக இருக்கும்போது நடிக்கிறாரா என ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.