என்னப்பா சொல்றீங்க..! நான் கர்ப்பமாக இருக்கிறேனா..? தெளிவுபடுத்திய நடிகை நிக்கி கல்ராணி..!
Author: Vignesh19 November 2022, 5:30 pm
தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் ஆதி. இதனை தொடர்ந்து யாகாவராயினும் நா காக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஆதியுடன் ஜோடி சேர்ந்து நடிகை நிக்கி கல்ராணி நடித்து வந்தார்.

அதன்பின் இருவருக்கும் காதல் ஏற்பட்ட கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டு ஹனிமூன் சென்று உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. திருமணமாகி 4 மாதத்தில் ஆதி – நிக்கி கல்ராணி அப்பா அம்மா போகும் விசயம் உண்மையா என்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

தற்போது நிக்கி கல்ராணி இந்த விசயம் கேட்டு ஷாக்காகி இருக்கிறாராம். நான் கர்ப்பமா, அது எனக்கே தெரியாது என்று ஷாக்காகி கர்ப்பமாக இல்லாததை உறுதிபடுத்தியிருக்கிறார் நிக்கி கல்ராணி.