என் பாவம் எல்லாம் சும்மா விடாது.. வடிவேலுவால் படப்பிடிப்பில் கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகை..!
Author: Vignesh5 October 2023, 2:59 pm
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலுவால் எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா அவரால் தான் இந்த நிலைமைக்கு ஆளாகினேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழில் ஏபிசிடி, பம்பரக்கண்ணாலே, இந்திரலோகத்தில் இரு அழகப்பன், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்திருந்த போது வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை வெளிப்படையாக கூறி கண்ணீர் விட்டு அழுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் சர்க்கரை நோயால் என் கணவர் மரணமடைந்தார். அதுகுறித்து சினிமாவை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட விசாரிக்கவில்லை.
என் மகள் படிப்பிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். கணவர் இருப்பதற்கு முன் நன்றாக இருந்த வாழ்க்கை கணவர் இறந்தப்பின் இல்லை. சாப்பட்டுக்கே நிற்கதியாக நிற்கிறேன் எனவும் தெரிவித்தார்.

சினிமாவில் தனக்கு வாய்ப்பில்லாமல் போக காரணமே நடிகர் வடிவேலு தான். சுறா படத்தில் அவருடன் தான் நடிக்க இருந்தது. ஆனால் வடிவேலு என்னை நடிக்கவிடாமல் வேறொருவரை நடிக்கவைத்திவிட்டார் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அவருக்கு பிடிக்காதவராக இருந்ததால் பல படங்களில் என்னை நடிக்கவிடாமல் தடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டு விட்டார் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதனால் கோபப்பட்டு வடிவேலுவிடம் சண்டையை போட்டிருக்கிறேன். ஏன் சார் இப்படி பண்றீங்க, நீங்க எங்கேயோ இருக்கீங்க நான் இப்போ தான் வளர்ந்து வரேன். நான் நடிக்கவிருந்த பல படங்களில் என்னை நடிக்கவிடாமல் திருப்பி அனுப்பி வெச்சிடீங்க. என் பாவம் எல்லாம் சும்மா விடாது. என்ன காரணம்? என கண்கலங்கி அழுதேன். நான் அழுததை பார்த்து ‘சரி விடு மா’ என வடிவேலு கூறினார். ஏவிஎம் ஸ்டுடியோவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரின் முன்னிலையில் வடிவேலுவை கண்டப்படி திட்டியதால் தான் எனக்கு இன்றுவரை வாய்ப்பு கிடைக்காமல் போனது என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.