டிசம்பர் 28 கேப்டனின் கடைசி நிமிடங்கள்; நடந்தது என்ன?.. முதன்முறையாக கூறிய பிரேமலதா..!

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.

லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.

இந்நிலையில், விஜயகாந்தின் மரண துக்கத்திலிருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. எப்போதும் மக்கள் மனதில் நிலைத்திருக்கக்கூடிய விஜயகாந்தின் கடைசி நாளில் என்ன ஆனது என்பதை பற்றி முதல் முறையாக பேசியுள்ளார் அவரது மனைவி பிரேமலதா.

அதாவது, 2014 ஆம் ஆண்டிலிருந்து விஜயகாந்த் இறப்பு வரை எத்தனையோ முறை உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளேன். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றோம். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள், மருத்துவமனையில் தங்கினோம். திடீரென்று 28ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கேப்டன் கையை பிடித்துக்கொண்டு ஒன்றும், ஆகாது வீட்டிற்கு சென்று விடுவோம் என்றேன். அவர் நான் கூறியதை கேட்டாலும், மூச்சு விட சிரமப்பட்டார். மருத்துவர்கள் இந்த முறை மிகவும் கஷ்டம் அனைவருக்கும் சொல்லிவிடுங்கள் என்றார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் விஜயகாந்தின் உயிர் பிரிந்து விட்டது. இதுதான் அன்றைக்கு விஜயகாந்த்க்கு நடந்தது என்று பிரேமலதா உருக்கமாக பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

திமுகவில் பதவி வகிக்க தகுதியில்லாத பொன்முடிக்கு அமைச்சர் பதவி எதுக்கு? வானதி சீனிவாசன் கொந்தளிப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…

1 hour ago

பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…

1 hour ago

என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…

2 hours ago

தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…

3 hours ago

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

3 hours ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

3 hours ago

This website uses cookies.